14862 அனுபவத்தினூடே: கட்டுரைகள் விமர்சனங்கள்.

ஆ.கந்தையா. பருத்தித்துறை: சித்தம் அழகியார் வெளியீடு, ஞானாலயம், 117, வி.எம்.வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). v, 106 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5ஒ14.5 சமீ., ISBN: 978-955- 42750-0-3. அமரர் ஆ.கந்தையா அவர்கள் அச்சுவேலியில் உள்ள தம்பாலை கிராமத்தில் பிறந்து, உத்திராவத்தை, பருத்தித்துறையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தவர். ஆங்கிலப் பட்டதாரியான இவர் ஆங்கிலப் பாட ஆசிரியராகவும், தமிழ்-ஆங்கில இலக்கியங்களின்மீது பரிச்சயம் மிக்கவராகவும், தொடர்வாசிப்பைக் கொண்டவராகவும் இருந்தவர். 90களில் பல்வேறு இலக்கியம் மற்றும் திறனாய்வுக் கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. இவரது மறைவின் பின்னர் நலன்விரும்பிகளால் இவற்றில் 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. சித்தம் அழகியார் வெளியீட்டுத் தொடரில் இரண்டாவது நூல். இந்நூலில் புராதன இந்தியாவில் ஓவியக் கலை, நா.ஞானகுமாரனின் நயந்தரு சைவசித்தாந்தம், 35ஆவது ஆண்டு மலர் பிரவேசம், இலக்கியப் பார்வையில் இப்சன், 20ஆம் நூற்றாண்டின் இன்பியல் நாடக ஆசிரியர் பேர்ணாட் ஷோ, படைப்புக்களில் படைப்பாளி தெணியான், புத்துயிர் வேண்டிநிற்கும் அழகு சுப்பிரமணியம், அழகு சுப்பிரமணியத்தின் ஆக்கங்கள், அழகு சுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாறு, வால்ட் விட்மன் புதுக்கவிதையின் தந்தையும் அமெரிக்காவின் ஆன்மீகக் குரலும், கலாபூஷணம் விருது பன்முகப்பட்ட படைப்பாற்றலுக்கான பரிசு, சோல் பெலோவின் மழை அரசன் கொண்டர்சன், ஐ.ஏ.ரிச்சர்ட் நவீன இலக்கியத் திறனாய்வின் முன்னோடி, முருகானந்தனின் இந்த மண் ஒரு சாதாரண வாசகனின் திறனாய்வு, ஆபிரிக்கக் கவிதை இரண்டு மண்டலத்தின் ஓர் ஒளிக்கீற்று, பா.இரகுவரன் கல்லூரி நாடகங்கள், அவலம் ஒரு மின் வாசிப்பு ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்