14869 பிரதிகளைப் பற்றிய பிரதிகள்.

மேமன்கவி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (13), 14-296 பக்கம், விலை: ரூபா 1250., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-00- 0191-5. கோடிச் சேலை (மலரன்பன்), முரண்பாடுகள் (இதயராசன்), மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் (துவாகரன்), வெறிச்சோடும் மனங்கள் (வெற்றிவேல் துஷ்யந்தன்), ஜீவநதி சஞ்சிகை மூன்றாவது ஆண்டு மலர், படிகள் சஞ்சிகையின் 30ஆவது இதழ், ஒரு சோம்பேறியின் கடல் (அஜந்தகுமார்), நான் நிழலானால் (ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா), செந்நீரும் கண்ணீரும் (சமரபாகு சீனா உதயகுமார்), இருமை (கே.எஸ்.சிவகுமாரன்), குள்ளன் (எம்.எம்.மன்சூர்), இன்னுமோர் உலகம் (கொற்றை பி.கிருஷ்ணானந்தன்), சர்வம் ப்ரம்மாஷஸ்மி (மலேசியா-நவீன் மனோகரன்), என் கடன் (வ.ஐ.வரதராஜன்), நிமிர்வு (அநாதரட்சகன்), தாரிக் (பாரதி அக்கா-மகாராணி), பீச்சாங்கை (சதீஸ்பிரபு), இரு சிறுகதைகள்-ஒப்பியல் கட்டுரைகள், இப்படியுமா? (வி.ரி.இளங்கோவன்), கண்ணீரினூடே தெரியும் வீதி (தேவமுகுந்தன்), வெள்ளிவிரல் (ஆர்.எம்.நௌஷாத்), தவறிப் போனவன் கதை (தெணியான்), பாயிஸா அலி கவிதைகள், இரவு மழையில் (ஈழக்கவி நவாஷ்), நந்தினி சேவியரின் கதைகள், ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் (ராஜாஜி ராஜகோபாலன்), அவளுக்கும் ஒரு வாழ்வு (கல்முனை முபாரக்), பாவு தளிர் தூவு வானம் (பசுந்திரா சசி), சிவப்பு டைனோசர்கள் (சு.தவச்செல்வன்), குதிரை இல்லாத ராஜகுமாரன் (ராஜாஜி ராஜகோபாலன்), கடவுச்சீட்டு (ஜீவகுமாரன்), கட்டுபொல் (பிரமீளா பிரதீபன்), நிழலைத் தேடி (ஏ.எஸ்.உபைத்துல்லாஹ்) ஆகிய நூல்களை பற்றிய திறனாய்வு முயற்சிகளாக இதிலுள்ள 33 கட்டுரைகளும் எழுதப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65497).

ஏனைய பதிவுகள்