14185 கதிரேசன்பேரில் ஆனந்தக் களிப்பு.

ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை. கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1947. (சென்னை: வு.சு.பாலகிருஷ்ண முதலியார், கலைமகள் விலாசம் பிரஸ், திருவொற்றியூர்). 54 பக்கம், விலை: 12 அணா, அளவு: 21×13 சமீ. இந்நூல் 732 செய்யுள் வரிகளைக் கொண்ட, கதிரேசன்பேரில் ஆனந்தக்களிப்பு, 192 செய்யுள் வரிகளைக் கொண்ட கதிர்காமத்து யேசல், 536 செய்யுள் வரிளைக் கொண்ட கதிர்காமக் கும்மி, 14 வரிகளைக் கொண்ட மங்களம் ஆகிய நான்கு படைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இந்நூல் தமிழகத்தில் இராமசாமி பிள்ளை அவர்களால், சென்னை, ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக்கூடத்திலும், சென்னை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடத்திலும், 1903ஆம் ஆண்டில் பல பதிப்புகள் அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், டீ. இரத்தின நாயகர் அன்ட் சன்ஸ் கம்பெனியாலும் 1926இல் சென்னை திருமகள் விலால அச்சியந்திரசாலையில் அச்சிட்ட வெளியிடப்பட்டள்ளது. 1947இல் இலங்கையில் கொழும்பு சரஸ்வதி புத்தகசாலையினர் விற்பனையுரிமை பெற்று மீண்டும் இதனை இலங்கையில் வெளியிட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02460).

ஏனைய பதிவுகள்