14191 குஞ்சிதபாதம்: இந்து சமயச் சிந்தனைக் கட்டுரைகள்.

சோ.குஹானந்த சர்மா. கொழும்பு 13: சோ. குஹானந்த சர்மா, 136/28, ஜோர்ஜ் ஆர் த. சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு: க.தியாகராசா, உரிமையாளர், ஓட்டோ அச்சகம்). 37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இந்து வித்யாநிதி பிரம்மஸ்ரீ சோ. குஹானந்த சர்மா அவர்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிட்டுவந்த இந்து சமயச் சிந்தனைக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். மேற்படி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் போது 23.06.1999 அன்று வெளியிடப்பட்டது. 1949ஆம் ஆண்டு முதல் ஐம்பது வருடங்களாக கொழும்பு ஸ்ரீ சிவகாமசௌந்தரி சமேத ஸ்ரீ பொன்னம் பலவாணேஸ்வரத்தில் சிவாச்சார்ய பணிகளை செய்து கொண்டிருப்பதுடன் தனது பணிக் காலத்தில் மூன்றாவது கும்பாபிஷேகத்தையும் இக்கோயிலில் செய்து முடித்தவரான பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்களை கௌரவிக்கும் வகையில் இந்நூலுக்கு குஞ்சிதபாதம் என்ற பெயரை ஆசிரியர் இட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 025734).

ஏனைய பதிவுகள்

Hockey Playing Legislation

Articles Overtime Inside Wagering Advice Sample Exactly what your Provides Know During the A trusted On the internet Roulette Gambling enterprise Whenever a myaccainsurance.com Related

12542 – அன்றாடத் தேவைகளுக்காக எழுதுதல் I : மேலதிக மொழி விருத்திப் பாடநெறி-தமிழ்.

M.J.M. அஸ்ஹர், S.M.R.P.சமரக்கோன். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.