14194 சிவபுராணம்.

மாணிக்கவாசகர் (மூலம்). யாழ்ப்பாணம்: இந்து மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு 1988. (அச்சக விபரம் தரப்படவில்லை). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. 1988 சிவராத்திரி தினத்தையொட்டி யாழ். பல்கலைக்கழக இந்து மன்றத்தினரால் அச்சிட்டு விநியோகிக்கப்பெற்ற நூல் இது. மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசக புராணத்தையும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இச்சிறுநூல் உள்ளடக்குகின்றது. சிவராத்திரி மகிமை பற்றி காஞ்சி காமகோடி பீடம் அருள்மிகு ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகளின் உரையும், கலாநிதி என்.ரமேசன் வழங்கிய ‘இலிங்கோற்பவ மூர்த்தி” என்ற கட்டுரையும் சிங்கள, ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட சிவராத்திரி தொடர்பான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16710).

ஏனைய பதிவுகள்

17830 புறநானூற்றில் அறம்.

முருகையா சதீஸ். திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், யு.சு.வுசயனைபெ, 31/1, சமாது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆவணி 2023. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரிண்டர்ஸ், பண்டத்தரிப்பு). ix, 104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ.,