சிற்றம்பல நாடிகள் (மூலம்), பொன்.அ.கனகசபை (விளக்கவுரை). புங்குடுதீவு 3: ச.தம்பையா, புங்குடுதீவு சிவதொண்டர் வெளியீடு, 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430,காங்கேசன்துறை வீதி). xviii, 169 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: ‘திருமுருகன் குருமூர்த்தியாய் எழுந்தருளி, திருவருள் செய்யப்பெற்ற பெரும்பேறு படைத்தவர்களுள் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் ஒருவர். மெய்கண்ட சந்தான சீட பரம்பரையில் உள்ளவர் இந்தச் சிற்றம்பல நாடிகள். இவர் திருச்செந்தூர்த் திருமுருகன் சந்நிதியில் தவமிருந்து, இளமையும் அழகும் ஒழுகி வழியும் திருமுருகன் திருவுருவை நேரில் தரிசித்த காட்சிகளையும், திருமுருக குருமூர்த்தி, தீட்சைசெய்து, உபதேசித்தவைகளையும், செய்யுள் வடிவில், சுப்பிரமணியர் அகவல் என்ற பெயரில் உபகரித்தருளி தாம் பெற்ற அருள்வளத்தை, பெறவிரும்பியோரையும், பெறுதற்கு ஆற்றுப்படையும் அருளியிருக்கிறார். அகவல் அடிப்படையிலிருந்து சுத்தாத்துவித முத்திவரை, சைவசித்தாந்த உண்மையை எடுத்துக்காட்டுவதாயும் அமைந்திருக்கின்றது. இந்த அருண்ஞான பொக்கிஷம் நித்திய பாராயணத்துக்கும் சமய சிந்தனைக்கும் கிடைத்ததொரு தேவாமிர்தம். சுப்பிரமணியர் அகவலைப் பன்னிரு வருடம் பாராயணம் செய்து, அதற்கு ஒரு நல்ல தெளிவான விளக்கவுரை செய்திருக்கின்றார் வித்துவான் திரு. பொன். அ.கனகசபை அவர்கள். வித்துவான் அவர்களின் மனத்தூய்மையும் ஆழமான சமய சிந்தனையும், விரிந்து பரந்த நூலாராய்ச்சியும் பிரசித்தமானவை. உரையில் எடுத்தாண்ட பிரமாண நூல்களின் அட்டவணை அநுபந்தமாய் வருவது நன்று”. (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, அணிந்துரையில்). (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).
Top No-deposit Added bonus Casinos online within the 2024
Posts Online casinos where you are able to enjoy Crazy Monkey Luxury Angry Furious Monkey RTP, Symbols & Winnings Free Spins Bonuses Just what online casino