14198 சைவசமயத் திருமுறைப் பாராயணத்திரட்டு.

மகாதேவ ஆச்சிரமம். கொழும்பு 12: தாளையான் அச்சகத்தினர், 115 மெசெஞ்சர் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 12: தாளையான் அச்சகத்தினர், 115 மெசெஞ்சர் வீதி). v, (4), 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீமகாதேவ ஆச்சிரமம் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு தாளையான் அச்சகத்தினரால் தொகுத்துப் பதிப்பிக்கப்பெற்று இலவசமாக அன்பர்களுக்கு வழங்கப்பெற்ற பிரசுரம். சற்குரு வணக்கம், அநுபூதி பெற வழி, முகவுரை, அணிந்துரை ஆகியவற்றுடன், திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம், திருமாளிகைத் தேவர் அருளிய திருவிசைப்பா, சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, தாயுமான சுவாமிகள் பாடல், திருமந்திரம், பட்டினத்தடிகள் பாடல், பரஞானத்தின் பயன், ஒளவை குறள் ஆகிய 19 திருமுறைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33205).

ஏனைய பதிவுகள்

13149 பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும் (ஆய்வு).

நா.நவநாயக மூர்த்தி. அக்கரைப்பற்று (கி.மா): வானதி பவனம், பனங்காடு, 1வது பதிப்பு, ஆடி 2017. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட்). xviii, 128 பக்கம், விலை: ரூபா 400, அளவு: 21×14.5 சமீ. பண்டைய மட்டக்களப்பு/மகாவம்சம்