கார்த்திக் புகழேந்தி, சிவகாசி சுரேஷ், சுபா கார்த்திக் (இதழாசிரியர்கள்). காஞ்சிபுரம்: சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளை, ஜீவா பதிப்பகம், இல. 351-MIG, NH-1இ நக்கீரர் வீதி, மறைமலை நகர், 1வது பதிப்பு, 2019. (தமிழ்நாடு: காகிதப்பறவை டிசைன் அன்ட் பிரின்ட் மீடியா, இல.16A, ஜெயில்சிங் நகர், பெருமாள்புரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி). 238 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ. சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் (01.03.1949-13.02.2019) யாழ்ப்பாணத்தில் குப்பிழான் கிராமத்தில் பிறந்தவர். சைவ சமயப் பேச்சாளராகப் பிரபல்யம் பெற்ற இவர் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லுரியில் பயின்று நில அளவையாளராகப் பயிற்சிபெற்ற போதிலும், ஆர்வம் காரணமாக ஆசிரியப்பணியில் ஈடுபட்டவர். கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1972-1973 காலப்பகுதியில் ஆசிரியப் பயிற்சிபெற்று, மலையகத்தின் எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து கேகாலையிலும் ஆசிரியப் பணியாற்றியவர். அவ்வேளையில் மலையகத்தில் சைவம் வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தவர். 1977இல் நிகழ்ந்த இனக் கலவரத்தின் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி உரும்பிராய் இந்துக் கல் லூரியில் 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆசிரியப் பணியுடன் சைவப்பணியும் ஆற்றிய இவரது சமய உரைகள் பலராலும் விரும்பப்பட்டன. இம்மலர் அவரது மறைவையொட்டி வெளியிடப்படும் நினைவுமலராகும். இதில் பல்வேறு பிரமுகர்களின் இரங்கலுரைகளும், அஞ்சலியுரைகளும், அமரர் சிவமகாலிங்கம் எழுதிய கட்டுரைகளும் அவர் பற்றிப் பிறர் எழுதிய வாழ்வும் பணிகளும் பற்றிய குறிப்புரைகளும் ஏராளமான புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன. இடையிடையே அமரர் சிவமகாலிங்கம் எழுதிய கட்டுரைகளாக, சைவத்தின் காவலர் ஆறுமுக நாவலர், சைவ சித்தாந்தமும் காசிவாசி செந்திநாதையரும், மெயப்பொருள் பேசியவா, சித்தபுருஷர்களில் மூலவர் திருமூலர், சித்தர்கள் கண்ட சமயநெறி, திருமந்திரத்தில் கடவுட் கோட்பாடு, மழலையர் கல்வியை மாண்புற வளர்ப்போம், பாடசாலைக் கல்விமுறையின் பயன்பாடும் முறைபாடும், அறிவுப்பசி தோன்றினால் அகக்கண் திறந்துவிடும், நல்லாசிரியனே ஞானவிளக்கு ஆகியவை இம்மலரில் இடம்பெற்றுள்ளன.
Genies Treasures Slot, Review and you may 100 percent free Gamble Trial
Posts Better A real income Gambling enterprises: Ladbrokes 20 free spins no deposit real money Simple tips to Play Online Slot Real cash Online game