த.துரைராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை, 5ஆவது ஆண்டு குருபூசை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (28) பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21.5×14.5 சமீ. கொழும்பு 13, லக்ஷ்மி அச்சகத்தினரும் கொழும்பு 13, வீமாஸ் பிரிண்டர்ஸ் நிறுவனத்தினரும் அன்பளிப்பாக வழங்கியுள்ள பிரசுரம் இது. திருக்கேதீஸ்வரத்தில் திருவாசக மடத்தை முதலில் ஸ்தாபித்தவர் சபாரத்தினம் சுவாமிகளாவார். அவரைப்பற்றிய இந்த நினைவு மலர், ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகளின் வாழ்வினையும் அவர் ஆற்றிச்சென்ற சிவப்பணிகளையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. அவர் பற்றிய வாழ்த்துரைகளை, வாழ்த்துக் கவிதைகளை, வாழ்வும் பணிகளும் பற்றிய குறிப்புக்களை அன்னாரின் தொண்டரடியார்களான கவிமாமணி, சிங்கையாழியான், வே.கெ.தனபாலன், ப.கோபாலகிருஷ்ணன், தங்கம்மா அப்பாக்குட்டி, க.கனகராசா, இரா.மகேந்திரசிங்கம், கரவைக்கிழார், ஆழ்கடலான், க.சி.குலரத்தினம், ஈழத்துச் சிவானந்தன், க.துரைராசா, த.துரைராசா, முருக-வே. பரமநாதன், செ.ஞானசேகரம், கே.பி.நடனசிகாமணி போன்றோர் இம்மலரில் வழங்கியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 16710).
16846 பறவைகள்.
மாலினி அரவிந்தன். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (சென்னை: கப்பிட்டல் பிரிண்டர்ஸ்). xii, 13-160 பக்கம், விலை: இந்திய