வ.செல்லையா. வவுனியா: மெய்கண்டார் ஆதீனம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (வவுனியா: நிர்மலா பிரின்டர்ஸ், 153A, குருமண்காடு). 20 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 20×14.5 சமீ. நாவலர் தினமான 09.12.1998 அன்று வெளியிடப்படும் நோக்குடன், வித்துவான் வ.செல்லையா அவர்களால் எழுதப்பட்ட இந்நூலில், நாவலர் கீர்த்தனைகள், நாவலர் அவதரித்தார் நல்லை நகர்தனிலே (ஆசிரியரின் கட்டுரை), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் வரலாறு, நாவலரின் பொன்மொழிகள், பெரியோர் சிந்தனையில் நாவலர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதி வெளியிட்ட நூல்கள், நாவலர் உரை எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகிய ஏழு தலைப்புகளின் கீழ் ஆறுமுக நாவலர் பற்றிய ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21249).