14910 திரு அஞ்சலி மலர்.

இலங்கையர் கனகசபை (ஆசிரியர்), த.கிருபாகரன் (இணை ஆசிரியர்). பிரான்ஸ்: சபரீசன் ஒன்றியம், 1வது பதிப்பு, 2001. (பாரிஸ்: மெய்கண்டான் அச்சகம்). 84 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. வட இலங்கை சர்வோதய அறங்காவலரும், தமிழ்கூறும் நல்லுலகினால் நன்கு அறியப்பட்டவரும், வாழ்நாள் முழுவதும் சமூக மேம்பாட்டுக்காக அல்லும் பகலும் உழைத்தவருமான அமரர் தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு. அவர்களின் மறைவு குறித்து வெளியிடப்பட்ட நினைவஞ்சலி மலர். சமூகத்தின் உயர்வே தனது லட்சியம் என சொல்லாலும் செயலாலும் வாழ்ந்து காட்டி, நிகழ்காலத்தவர் மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினரும் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் வாழ்ந்த பெருமகன் தான் தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு. அன்னாரைப் பற்றிய மனப்பதிவுகளை பாரிஸ் வாழ் பிரமுகர்கள் அஞ்சலிகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஏனைய பதிவுகள்