14912 இரண்டெழுத்தில் இயங்கிவந்த இணையற்ற செயல்வீரன்.

மலர்க் குழு. கொழும்பு 13: எம்.சி.சுப்பிரமணியம் நினைவுக் குழு, 161-1/1, ஜிந்துப்பிட்டி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்த மேடு). 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. தோழர் எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக நடந்த நினைவுச் சொற்பொழிவு 20.01.2004 அன்று பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களால் நிகழ்த்தப்பட்ட வேளையில் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுதி இதுவாகும். இலங்கையின் வட பகுதியில் தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை 1946இல் முதன்முதலாக ஸ்தாபிப்பதற்கு உதவிய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் தோழர் எம்.சி. சுப்பிரமணியம். 1957இல் எம்.சி. அவர்கள் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகா சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். எம்.சி. அவர்கள் கம்யூனிஸ்ட் புரட்சிகர உணர்வோடு செயலாற்றிய காலத்தில் சீவல் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிய தவறணை முறையை ஒழிக்க உழைத்து, மரவரி முறையை ஏற்படுத்த உதவினார். வட இலங்கை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி அதன் நிர்வாகச் செயலாளராகவும் சிறப்பாகச் செயலாற்றினார். 1970இல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார். எம்.சி. பற்றிய பல்வேறு அரசியல், சமூகப் பிரமுகர்களின் கருத்துக்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39997).

ஏனைய பதிவுகள்

32red Ports

Content How Rng Ensures Equity Within the Slots During the 32red Gambling enterprise The Score From 32red Gambling establishment Rating To five-hundred Incentive Bucks All

14123 கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக சிறப்புமலர்.

எச்.எச்.விக்ரமசிங்க (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (52) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14738 அவனுக்குள் ஆயிரம் (நாவல்).

தினேஷ் ஏகாம்பரம். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). x,