என்.சண்முகதாசன். கொழும்பு 13: மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம், இல. 9, 1/5, அல்விஸ் பிளேஸ், 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: Fast Printers, 289½, காலி வீதி, வெள்ளவத்தை). 426 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15.5 சமீ.,ISBN: 978-955-4712-00-3. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததும் சமாந்தரமான வாழ்க்கையைக் கொண்டதுமே புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தலைவரான தோழர் என்.சண்முகதாசனின் வாழ்க்கை வரலாறாகும். தோழர் என்.சண்முகதாசனின் மறைவின் 20ஆவது ஆண்டு நினைவின் போது வெளியிடப்பெற்றுள்ள இந்நூலில் தோழர் சண்ணின் அரசியல் வாழ்க்கை 17 இயல்களில் விரிகின்றன. முன்னர் ஜுலை 1989இல் Political Memoirs of an unrepentant Communist என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆங்கில சுயசரிதை நூலின் தமிழாக்கம் இதுவாகும். பல்கலைக்கழக வாழ்க்கை, லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவு, கட்சியின் ஆரம்ப நாட்கள், யுத்தத்துக்குப் பிந்திய காலம், 1947 பொது வேலை நிறுத்தம், காலனிசத்திலிருந்து நவ காலனிசத்துக்கு, ஹர்த்தால் முதல் 1956 வரை, பண்டாரநாயக்கா சகாப்தம், பண்டாரநாயக்காவுக்கு பிறகு, கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு, கொந்தளிப்பான அறுபதாம் ஆண்டுகள், மகத்தான பாட்டாளி வர்க்கக் கலாசாரப் புரட்சி, ஐக்கிய முன்னணி அரசாங்கமும் அதன் பின்னரும், 1971இற்குப் பின், மாசேதுங் சிந்தனைக்கு ஆதரவாக, மார்க்சிய-லெனினியவாதிகள் சர்வதேசிய ரீதியில் ஐக்கியப் படுதல், 1983 ஜுலைக்குப் பின், பின்னுரை ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் மேலதிகமாக லண்டனை மையமாகக் கொண்டியங்கும் இன உறவுகள் நிறுவனத்தின் பணியாளர் ஏ.சிவானந்தன், பத்திரிகையாளர் அமரர் அஜித் சமரநாயக்க, சூரியசேகரம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளையும், திரு சிவானந்தனின் சுயஉந யனெ ஊடயளள என்ற சஞ்சிகையில், நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் பேராசிரியர் என். சண்முகரத்தினம் எழுதிய நூல் விமர்சனத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.
Mega Moolah Slot machine game to experience Totally free
Content Monsieur Vegas online casino bonus – What is the Small Come across solution? GameFAQs Q&An excellent It’s started created by Microgaming, an established software