நூலகம் நிறுவனம். கொழும்பு: நூலகம் பவுண்டேஷன், 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ புளுமென்டால் வீதி).
x, 640 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 25.5X18 சமீ., ISBN: 978-955-4918-00-9.
2013ம் ஆண்டு ஏப்ரல் 27-28ம் திகதிகளில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தமிழ் ஆவண மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின்; தொகுப்பு. மலர்க் குழுவில், மயூரன் சிவநாதன், பார்கவி காந்திநாதன், விஷாலினி ஜயராஜன், ஜனனி அருந்தவரட்ணம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 48 கட்டுரைகள் ஆவணப்படுத்தலும் தொழினுட்பமும், வரலாறுஃ தொல்லியல்ஃ மரபுரிமை, நாட்டாரியல், கலை, சமூகம், தமிழ்மொழியும் இலக்கியமும், நூலகவியல், பண்பாடு ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 28.4.2013 இல் இடம்பெற்ற நூலகவியல் அரங்கில் ‘நூல்தேட்டம்-ஒரு மதிப்பீட்டு ஆய்வு” என்ற தலைப்பில் அனிதா கிருஷ்ணசாமி, கல்பனா சந்திரசேகர் ஆகிய இரு நூலகர்களும் இணைந்து மேற்கொண்டிருந்த ஆய்வினை பக்கம் 523-528 இல் காணமுடிகின்றது.