13014 புதுசு: புதுசு இதழ்களின் முழுத் தொகுப்பு 1980-1987.

அ.இரவி, பா.பாலசூரியன், இளவாலை விஜயேந்திரன், நா.சபேசன். நோர்வே: புதுசுகள் வெளியீடு, Vestlisvingen 90, 0969, Oslo, 1வது பதிப்பு, ஜுலை 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
xvi, 506 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21×14 சமீ.

புதுசு முதலாவது இதழ் வெளிவந்து 37 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் புதுசு இதழ்களின் வரலாற்று முக்கியத்துவம் கருதி முழுத்தொகுப்பும் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. புதுசு சஞ்சிகை, 80 களின் ஆரம்பத்தில் வெளிவர ஆரம்பித்தது. தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் பழைய மாணவர்களான 4 பேரின் கூட்டிணைவாக இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. இதன் நிர்வாக ஆசிரியராக – நா. சபேசன் பணியாற்றினார். ஆரம்பத்தில் ஆசிரியர் குழுவில் இளவாலை விஜயேந்திரன், பாலசூரியன், அளவெட்டி அ. இரவி ஆகியோர் அங்கம் வகித்தனர். இலக்கியம் சார்ந்த சஞ்சிகையாகவே இது வெளியானது. 1987 வரை இந்த இதழ் தொடர்ந்து வெளியானது. காலாண்டு சஞ்சிகையாக வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் விநியோகம், கட்டுரைகள் பெறுவதிலான சிரமங்கள் காரணமாக கால ஒழுங்கில் வெளிவரவில்லை.

ஏனைய பதிவுகள்

Secrets Of your own Pyramids Slots

Blogs Simple tips to Enjoy Totally free Demonstration Ports Barcrest Slot App Opinion Starburst Xxxtreme Slot Faqs Up coming Habanero Slots The fresh icons in