13016 இணைகரம்: மாணவர் சிறப்பிதழ்.

வி.கே.ரவீந்திரன் (இதழாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டக் கூட்டுறவுச் சபை, பயனியர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(13), 114 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30.00, அளவு: 21×14 சமீ.

மட்டக்களப்பு மாவட்டக் கூட்டுறவு சபையின் சஞ்சிகையான இணைகரம் தனது இரண்டாவது இதழை ஜுலை 2001இல் (கரம் 1, கதிர் 2) மாணவர் சிறப்பிதழாக வெளியிட்டது. இவ்விதழில் கே.தம்பையா, எம்.எம்.மஃறூப் கரீம், ஆரையூர் இளவல் ஆகியோரின் சிறப்புக் கட்டுரைகளும், மு.ஹ.சித்திவாஸ்மியா, அ.ற.ஹஜானியா ஆகிய மாணவர்களின் பரிசுக் கட்டுரைகளும், சி.கோணேஸ்வரன், ந.நல்லராசா, க.கனகசுந்தரம் ஆகியோரின் கட்டுரைகளும், மட்டக்களப்பு இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தரும் எழுத்தாளருமான ஓ.கே.குணநாதனின் நேர்காணலும், மண்டூர் அசோகா, சி.கனகசூரியம், ஆ.கு.கு.முஜிபா ஆகியோரின் சிறுகதைகளும், பிரம்மஸ்ரீ காந்தன் குருக்களின் சிறப்புக் கவிதை உள்ளிட்ட கலாசூரி வெ.விநாயகமூர்த்தி, ம.கிரிசாந்தினி, எருவில் கலிங்கன், மு.மயூரன், மண்டூர் ராம், செ.பாக்கியநாதன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32276).

ஏனைய பதிவுகள்

15989 மட்டக்களப்பின் மாண்புறு குருக்கள்மடம் எனும் பேரூர்: ஒரு வரலாற்று ஆய்வு.

மாசிலாமணி திருநாவுக்கரசு. மட்டக்களப்பு: மா.திருநாவுக்கரசு, குருக்கள்மடம், 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). (6), 406 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-53477-0-9. பேரூர்

17690 பிணைப்பு (சிறுகதைத் தொகுதி).

ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா 500.,

Digital Casino No-deposit Provide

Posts Just what are Required Incentives? How we Curate All of our 100percent Put Added bonus British List No deposit Totally free Spins Suggestion Incentive

17524 என்ர அப்பு என்ர அம்மா: கவிதைகள்.

சோ.தேவராஜா. மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.அச்சகம், சில்லாலை வீதி). vi, 42 பக்கம், விலை: ரூபா 300., அளவு: