மு.க.சு.சிவகுமாரன் (பிரதம ஆசிரியர்). ஜேர்மனி: வெற்றிமணி, Brinker Höhe 13, 58507 Lüdenscheid, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
116 பக்கம், வண்ணப்படங்கள், விலை: இலவசம், அளவு: 30×21 சமீ.
1950இல் இலங்கையில் வடபுலத்தில் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களால் தாபிக்கப்பட்ட சிறுவர் சஞ்சிகை, பின்னாளில் அவரது மகன் மு.க.சு.சிவகுமாரன் அவர்களால் ஜேர்மனியில் இலவசப் பத்திரிகையாக ஜனரஞ்சகச் செய்திகளுடன் பல்வர்ண மாசிகையாகத் தொடர்ந்தது. ஜேர்மனியில் வெளிவந்த வெற்றிமணி இதழ் தனது 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் இம்மலர் சிறப்பிதழாக பிரசுரமாகியுள்ளது. இலவச வெளியீடாக வெளிவரும் இந்த இதழில் மொழி, பண்பாடு, பரதம், தமிழ் பண்பாட்டு விழுமியங்கள், அறிவியல், புதிய கண்டு பிடிப்புகள் சார்பான செய்திகள், ஈழத்து பிரபலங்களின் தகவல்கள், சினிமா, ஆன்மீகம் என பல சுவையான விடயங்கள் கண்கவர் வண்ணப் படங்களுடன் இடம்பெற்றுள்ளன. புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களின் நிகழ்வுகளின் செய்திகள் இதில் தவறாது வெளிவருகின்றன. அதிக விளம்பரங்களோடு வெளிவரும் இதழாக விளங்குகின்ற போதும் புலம் பெயர்ந்தவர்கள் மட்டில் எமது பண்பாட்டு அம்சங்களை பதிய வைக்க இந்த இதழ் பெரும் சேவை செய்கிறது.