கா.குகபாலன் (தொகுப்பாசிரியர்). புங்குடுதீவு: கலைப்பெரு மன்றம்இ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
60 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 24.5×17 சமீ.
புங்குடுதீவில், மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த அம்பலவாணர் கலையரங்கம் 15.04.2017 சனிக்கிழமை காலை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியடைந்ததையொட்டி, 22.04.2018 அன்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள், வரவு செலவுக் கணக்கு அறிக்கை, அம்பலவாணர் கலையரங்கம் பற்றியும், வாணர் சகோதரர்கள் பற்றியும் எழுதப்பட்ட ஆக்கங்கள் உள்ளிட்ட 33 படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. புங்குடுதீவின் மடத்துவெளிக் கிராமத்தில் 1890இல் பிறந்தவர் கந்தப்பர் அம்பலவாணர் (பெரியவாணர்). மலாயாவில் பணியாற்றிய இவர் ஊர் திரும்பியதும் இவரும், இவரது சகாவான சண்முகம் அம்பலவாணர் (சின்னவாணர்) அவர்களும் இணைந்து புங்குடுதீவு-மலாயா ஐக்கிய சங்கம் ஒன்றினை நிறுவி, தீவகத்துக்கு அளப்பெரும் தொண்டாற்றி வந்தனர். 1926இல் அகில இலங்கை புங்குடுதீவு மகாசேவா சங்கம் என்னும் அமைப்பையும் உருவாக்கி ஊர்மக்களின் அடிப்படைத் தேவைகளை பிரித்தானிய அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்க வழிசமைத்தனர். 1952இல் புங்குடுதீவு-வேலணைத் தாம்போதியின் உருவாக்கத்திற்கும்இ 1960ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பெருநிலப் பரப்பையும் தீவகத்தையும் இணைக்கும் பண்ணைத் தாம்போதியின் உருவாக்கத்திலும் இவர்களது பங்களிப்பு இன்றியமையாதிருந்தது. இவர்களின் நினைவாக 1977இல் புங்குடுதீவு கிழக்கில் அம்பலவாணர் அரங்கம் என்ற பெயரில் ஒரு திறந்தவெளி அரங்கம் திறந்துவைக்கப்பட்டது. அவ்வரங்கின் விரிவுத்திட்டமாக இக்கலையரங்கம் உள்ளக அரங்கமாக இருக்கை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.