13024 கிராமிய பூபாளம் 2019: வரலாற்றைப் படித்து வரலாற்றைப் படைத்து வரலாறாகி நிற்கும் தொண்டர் திருவுக்கு அகவை 80இல் திருவுருவச் சிலை: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (மாவிட்டபுரம்: அக்ஷதா பதிப்பகம்).
44 பக்கம்இ வண்ணப்படத் தகடுகள்இ விலை: அன்பளிப்புஇ அளவு: 24.5×17 சமீ.

புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் ஜேர்மனியில் என்னெப்பெற்றால் பிரதேசத்தில் 05.10.2019 அன்று நடத்திய கிராமிய பூபாளம் கலைமாலைப்பொழுது நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். மேற்படி அமைப்பினரால் புங்குடுதீவில் அமைந்துள்ள வட இலங்கை சர்வோதய வளாகத்தில் அதன் தாபகர் தொண்டர் க.திருநாவுக்கரசு (1939-2001) அவர்களுடைய சிலை 05.06.2019 அன்று திறந்துவைக்கப்பட்ட வேளையில் வெளியிடப்பட்ட மலரின் மீள் பதிப்பாக இந்நூல் அமைந்துள்ளது. வாழ்த்துச் செய்திகளுடன், சர்வோதயப் பணிகள், சர்வோதய தொண்டர்கள் பற்றிய புகைப்படங்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

மேலும் பார்க்க: 13291

ஏனைய பதிவுகள்