13031 பொதுமக்கள் நம்பிக்கையை மீள் கட்டியெழுப்புதல்: இலங்கையில் ஊடகத்துறை, ஊடகத் தொழில் தொடர்பான மதிப்பீடு.

சி.ரகுராம். கொழும்பு: ஊடக மறுசீரமைப்புகளுக்கான செயலகம், 1வது பதிப்பு, மே 2016. (பன்னல: மஜெஸ்டிக் பிரிண்ட் ஷொப்).
xx, 304 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.

ஊடகத்துறை, ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளோர், ஊடகப் பரிந்துரைக் குழுக்கள் ஆகியன பாரிய அளவில் பங்கெடுப்பாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பரந்தளவிலான கலந்தாலோசனைகள் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கை இதுவாகும். பயன்மிக்க நிலைமைப் பகுப்பாய்வினை இவ்வறிக்கை வழங்குவதோடு, கொள்கைரீதியான நெறிப்படுத்தல்கள், விதப்புரைகள் ஆகியவற்றையும் வழங்குகின்றது. அறிக்கை தயாரிப்புக் குழுவில் விஜயானந்த ஜயவீர (மதியுரைஞர்), கருணாரத்தின பரணவிதான (ஆலோசகர்), ரங்க கலன்சூரிய (ஆலோசகர்), பிரதீப் என்.வீரசிங்க(குழுத்தலைவர்), நாலக்க குணவர்த்தன (மதியுரை ஆசிரியர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழாக்கப் பிரிவில், ரஜீவன் அரசரத்தினம், சிவப்பிரியா ஸ்ரீராம், கிருத்திகா தர்மராஜா, நாகபூஷணி, எம்.எஸ்.எம்.அயூப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்;. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24839).

மேலும் பார்க்க: 13006>14A08>

ஏனைய பதிவுகள்

15796 வேல்விழியாள் மறவன்.

சிவநயனி முகுந்தன். கனடா: வித்தக விருட்சம், 1வது பதிப்பு, 2012. (கனடா: Q Copy and Print Centre). 625 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர்