12009 – பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் ஆக்கங்கள்: நூல்விபரப் பட்டியல்.

எம்.ஐ. நிஸாமுதீன், நீலாம்பிகை நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்), எம்.பீ.எம்.பைரூஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: வெளியீட்டு விபரம், பதிப்பு ஆண்டு தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 361, ½, டாம் வீதி).

93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் கல்விசார் எழுத்துலகப் பங்களிப்பு இந்நூற் பட்டியலில் விரிகின்றது. அவரது கல்வி வாழ்க்கை பற்றிய கலாநிதி மா. கருணாநிதியின் அறிமுகக் கட்டுரையைத் தொடர்ந்து பேராசிரியரின் நூல்கள், பருவ வெளியீடுகளிலும் ஆண்டு மலர்களிலும் தினசரிப் பத்திரிகைகளிலும் தினசரி ஆங்கிலப் பத்திரிகைகளான Daily News, The Island, Work Shop (NIE) ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அவரது ஆக்கங்கள் பற்றிய வழிகாட்டி விபரம் ஆகியன தொகுக்கப்பட்டுள்ளன. ஈற்றில் பதிவுகளுக்கான தலையங்க அகரவரிசைப் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. எம்.ஐ.நிஸாமுதீன், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்தின் தகவல் அதிகாரியாகவும், நீலாம்பிகை நாகலிங்கம், வவுனியா கல்வியியற் கல்லூரியின் நூலகராகவும் பணியாற்றுகின்றனர். காலஞ்சென்ற எம்.பீ.எம்.பைரூஸ், தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதம நூலகராகப் பணியாற்றியவராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44357). மேலும் பார்க்க: 13A22, 12952

ஏனைய பதிவுகள்

12130 – கந்தர்வ கானங்கள்: மாவைக் கந்தன் பாமாலை.

மாவை பாரதி (இயற்பெயர்: பாகீரதி கணேசதுரை). மாவிட்டபுரம்: மாவை ஆதீனம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: தர்சன் அச்சகம், ஆனைக்கோட்டை). xvi, 74 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 20×14.5

12455 – உடப்பு தமிழ் மகாவித்தியாலயம : நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004.

நடராஜா பத்மானந்தன் (இதழாசிரியர்). புத்தளம்: பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயம், பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 103, விவேகானந்தா மேடு). xvii, 148 பக்கம், விலை:

12044 – இந்து சமய விழாக்களும் விரதங்களும்.

சோ.குஹானந்த சர்மா. கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (4), 73