12035 விடுதலை இறையியல்.

ஞானமுத்து விக்ரர் பிலேந்திரன். யாழ்ப்பாணம்: ஆயர் இல்லம், 1வது பதிப்பு, ஜுலை 2009. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு).

(ii), 18 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-96653-7-3.

இறையியல் என்பது வெறும் கோட்பாடுகள், நம்பிக்கைகள், மீட்பு பற்றிய விடயங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. மாறாக, மனித வாழ்வின் இருத்தலியலோடு தொடர்புபட்ட அனைத்து விசைகளின் தாக்கங்களையும் அவற்றின் பின்புலங்களையும் கருத்திற்கொண்டு ஆய்ந்து எடுக்கப்படுகின்ற முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். திருச்சபையின் இறையியல் வரலாற்றில் நீண்டகாலமாக முதன்மைப்படுத்தப்பட்டு குருத்துவக் கல்லூரி களிலும், ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வந்த கோட்பாட்டு இறையியல் மனிதர் வாழ்வில் எதிர்கொண்ட சிக்கல்களையும், காரண காரியங்களையும் கண்டறிந்து பரிகாரங்களை முன்வைக்கும் முறைமைகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த நிலைப்பாடே இருத்தலியல் என்னும் எண்ணக் கருவின் தோற்றத்திற்கும், இருத்தலியல் இறையியலின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக அமைந்தது. மேற்கண்ட பின்னணியிலேயே விடுதலை இறையியல் பற்றி இச்சிறுநூல் பேசுகின்றது.

மேலும் பார்க்க: 12842

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்