எஸ்.ஏ.எதிரிவீர (ஆங்கில மூலம்), வீ.சித்தார்த்தா (தமிழாக்கம்). சென்னை 600 008: பிக்கு யு.ரத்னபால, மகாபோதி சங்கம், 17, கென்னட் லேன், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600 007: குளோப் பிரின்டோகிராப்பர்ஸ், 14, முருகப்பா முதலி தெரு, புரசவாக்கம்).
vi, 91 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
பௌத்தம் ஒருபுரண ஞான சமயமாகும். அதில் பெரும் கருணைக்கும் பேரறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இந்நூலில் பௌத்த தம்மத்தின் அடிப்படைக் கொள்கைகளை களனிப் பல்கலைக்கழகத்தின் பௌத்தபீடத்தை சேர்ந்த கலாநிதி எஸ்.ஏ.எதிரிவீர அவர்கள் தனது ஆங்கில நூலில் விரிவாக எழுதியிருந்தார். அதன் தமிழாக்கம் பெரியார்தாசன் டாக்டர் வீ.சித்தார்த்தாஅவர்களால் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் புத்தரும் பவுத்தமும், புத்தரின் வாழ்க்கை, தம்மம், சில அடிப்படை போதனைகள், நான்கு உன்னத வாய்மைகள், உன்னத எண்வழிப் பாதை, மனித ஆளுமையின் பகுப்பாய்வு, இருப்பின் உண்மை நிலை, ஆன்மா இல்லை, படைப்புக் கடவுள் இல்லை, சார்புநிலைத் தோற்றுவாய், கம்மா (கர்மா), மறுபிறப்பு (மீள் உருவாக்கம்), வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, விடையளிக்கப்படாத வினாக்கள், மனத்தைப் பண்படுத்தல் (தியானம்), நிப்பாணம், அரஹந்த் (அறவோர்), சங்கம், அறவியல், அரசியல் சிந்தனைகள், பொருளாதாரச் சிந்தனைகள், சமூகப் போதனைகள், விடுதலை ஆகிய 24 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25261).