ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), ம.மு.உவைஸ் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: பிரசுரக் கமிட்டி, அரசாங்க ஊழியர் பௌத்த சங்கம், 53ஃ3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு 10: ANCL, லேக் ஹவுஸ், டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை).
(10), 11810(2) 10 14, (10), 112 பக்கம், சித்திரங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 61ஆம் ஆண்டாக அரசாங்க ஊழியர் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக மேதகு ஜனாதிபதி (சந்திரிக்கா பண்டாரநாயக்க) அவர்களின் வாழ்த்துச் செய்தி, சிந்திப்பதற்கான சில பயனுள்ள விடயங்கள் (பீ.எம்.விஜேகூன்), அறமுரைக்கும் பௌத்த இந்து நூல்கள் இரண்டு: தம்மபதமும் திருக்குறளும் (த.கனகரத்தினம்), புத்தரும் சுஜாதையும் (ம.மு.உவைஸ்) ஆகிய நான்கு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழறிஞர் ம.மு.உவைஸ் இவ்விதழின் தமிழ்ப் பகுதிப் பதிப்பாசிரியராக 15 ஆண்டுகளாகப் பணியாற்றியவர். தனது 74ஆவது வயதில் மறைந்துவிட்டார். அவரது பங்களிப்புடன் வெளிவந்த இறுதி ‘வெசாக் சிரிசர’ இதழ் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15058).