12046 – இந்து மதம் என்ன சொல்கிறது: பாகம் 4: இறை நோக்கிய பயணம்.

திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 136 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-8354-71-1. 294.5

இது ‘இந்துமதம் என்ன சொல்கிறது?’ என்னும் தொடரில் வெளிவந்துள்ள ஆசிரியரின் 4ஆவது நூல். இறை நோக்கிய பயணம் என்ற இந்நூலில் இறை தாளினை எய்துவதற்கான சில படிமுறைக் கருத்துக்களை பதினொரு கட்டுரைகளின் வாயிலாக வழங்கியிருக்கிறார். இந்துநெறி சன்மார்க்க நெறி, ஆட்டுவிக்கும் ஆசைகளை வேரறுத்தல், இறை நாம மகத்துவம், உள்ளத் தூய்மையுடனான அன்பு, இறைவழிபாட்டினை ஏற்றுவோம், அன்னை பராசக்தி வழிபாடு, நல்லொழுக்கம், மனிதனின் இரண்டு பக்கங்கள், மகத்தான மானுடனாய் மாற, தியானம், விஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப் பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15049 உளவியல் கட்டுரைகள்.

க.பரணீதரன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 76 பக்கம், விலை: ரூபா