12048 – இந்துக்களின் சடங்குகள்.

இந்து மகளிர் மன்றம். யாழ்ப்பாணம்: அமரர் ஆ.சி. குணரெத்தினம் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(32), 116 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

இந்நினைவு மலரின் முதற்பகுதி அமரர் ஆ.சி.குணரத்தினம் அவர்களின் மறைவுக்கான அஞ்சலிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. பின்னைய பகுதியில் இந்துக்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள் சம்பந்தமான துணுக்குச் செய்திகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இதிலுள்ள தகவல்கள் கொழும்பு இந்து மகளிர் மன்றத்தினரின் வெளியீடான இந்து பாரம்பரியம் இதழிலிருந்து பெற்றுத் தொகுக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37969).

ஏனைய பதிவுகள்

15407 ஜீவநதி அரங்கக் கட்டுரைகள்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). (4), 68