12050 – இலங்கையில் கற்புடைமாதர் வழிபாடு.

க.இ.குமாரசாமி (தொகுப்பாசிரியர், புனைபெயர்: கோவைக்கிழார்). கோப்பாய்: க.இ.குமாரசாமி, அரவிந்த வாசம், கிளுவானை வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

இலங்கைத் தமிழர் பிரதேசங்களில் உள்ள ‘கற்புடை மாதர்’ தெய்வங்களான கண்ணகையம்மன், திரௌபதி அம்மன், சீதையம்மன் ஆலயங்கள் தொடர்பாக ‘இலங்கைத் திருநாட்டின் இந்துக் கோயில்கள்’ (இந்து கலாச்சார அமைச்சு வெளியீடு), இலங்கைச் சரித்திரம், மற்றும் பல ஆலய வெளியீடுகள், ஆய்வரங்கக் கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து தகவல்களைத் திரட்டித் தொகுத்து வழங்கியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி, இலங்கைச் சரித்திரம், இலங்கை – தமிழ்ப் பிரதேசங்களில் கண்ணகி கோயில்கள், பாரதத்தில் திரௌபதை, திரௌபதை அம்மன் கோயில்கள், பாரதத்தில் ஒரு கவிதை, இராமாயணத்தில் சீதை, சீதையம்மன் கோயில் நுவரெலியா, மட்டக்களப்பிற்கே உரிய கண்ணகியம்மன் வைகாசிப் பெருவிழா, சில குறிப்புக்கள், ஆதாரமான நூல்கள் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36719).

ஏனைய பதிவுகள்

13235 திருமந்திரம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

சுந்தரம் தர்மலிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சுந்தரம் தர்மலிங்கம், பொற்பதி வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (கொழும்பு 6: Hookup plus, 2, 1/1 A, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை). 134 பக்கம்,