12051 – ஈழத்திருநாட்டின் திரௌபதி வழிபாடுகள்.

உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 1வது பதிப்பு, ஜுலை 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiii, 59 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 215., அளவு: 21×14.5 சமீ.

சக்தி வழிபாடுகள் இலங்கையில் முனைப்புப்பெற்றுவரும் இக்காலத்தில் உடப்பு, முந்தல், பாண்டிருப்பு போன்ற இடங்களில் திரௌபதி அம்மன் வழிபாட்டு முறையானது பாரம்பரியத்துடனும் மரபுகளைத் தழுவியும் நிகழ்த்தப்படுகின்றது. இத்தகைய பின்புலத்தில் திரௌபதையம்மன் ஆலயங்களின் தொன்மைகள், சிறப்புகள், வழிபாட்டு முறைமைகள், அதையொட்டிய உற்சவ நடைமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என்பவற்றை உள்ளீடாகக் கொண்டு இச்சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு, சக்தி வழிபாடு அதன் தொன்மை, திரௌபதை வழிபாட்டின் தோற்றம், இலங்கையில் தொன்மையும் சிறப்பும் கொண்டது திரௌபதையம்மன் வழிபாடு (மீள்பிரசுரம்: தினகரன், 09.01.2014), திரௌபதை அம்மன் ஆலய வழிபாடுகள், பாண்டிருப்பு திரௌபதை அம்மனின் தீப்பள்ளம் உற்சவம், உடப்பு திரௌபதி அம்மன் ஆலயமும் வழிபாட்டு முறைகளும், முந்தலில் தமிழ் பண்பாட்டை எடுத்தியம்பும் திரௌபதி உற்சவம் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

Real money Ports App 2024

Blogs Can i Gamble Vintage Slots 100percent free? Should i Enjoy 100 percent free Games? Ghostbusters Triple Slime: Best Totally free Revolves Bonus Round Merkur

14612 தமிழோடு இசை பாடல்.

லயனல் திலகநாயகம் போல். ஆனைக்கோட்டை: திருமதி பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண். வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). xxiv, 81