தவயோகி கண்ணையா. நுவரெலியா: ஸ்ரீ காயத்ரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் ஸ்ரீலங்காதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×11.5 சமீ.
இந்து சமயத்தவர்கள் பெருமதிப்புக் கொடுத்துள்ள காயத்ரி என்பதன் கருத்து என்ன என்பதை பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஏனெனில் புரிந்துகொண்டிருந்தால் யாரும் அதன் சாதனையைச் செய்யாமலிருக்க மாட்டார்கள் என்று கூறும் ஆசிரியர் இதில் காயத்ரி மந்திரம் என்பதென்னவென்று பல்வேறு சாஸ்திர ஆதாரங்களின் வழியாக விளக்குவதுடன் அவற்றின் ஆன்மீக உட்பொருள் என்ன என்பதையும் விளக்குகின்றார். காயத்ரியின் தத்துவங்களை தௌ;ளத் தெளிவாக விளக்கும் தெய்வீகப் படைப்பாக தவயோகி கண்ணையா இதனை ஆக்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 729/42728).