12056 – சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்.

சி.பத்மநாதன், க.இரகுபரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xxii, 462 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 350., அளவு: 22×15 சமீ.

நான்கு பிரதான பிரிவுகளின்கீழ் ஈழத்து, தமிழகப் பேராசிரியர்களால் எழுதப்பெற்ற 31 ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும் என்ற தலைப்பில் மேற்படி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. அரசும் சமூகமும் என்ற முதற் பிரிவில் சோழர்காலச் சமூகக் கட்டமைப்பு (எ.சுப்பராயலு), அத்தரகுளியவிலுள்ள முதலாம் இராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு (சி. பத்மநாதன்), Artisans and Craftsmanship in the medieval Chola Milieu (விஜயா ராமசாமி), முதலாம் பராந்தக சோழனால் இலங்கையில் வெற்றிகொள்ளப்பட்ட நாகநாடு (ப.புஷ்பரட்ணம்), சோழநாட்டில் நீருரிமை (கி.இரா.சங்கரன்), சோழர் காலப் பெண்கள் (செ.யோகராசா) ஆகிய கட்டுரைகளும், சமயமும் தத்துவமும் என்ற இரண்டாம் பிரிவில் சோழப் பேரரசில் பௌத்தம் (சி.பத்மநாதன்), சைவத்திருமுறைத் தொகுப்பு (ந.முத்துமோகன்), வைணவ பாசரத் தொகுப்பு (அ.சண்முகதாஸ்), அடியார் வழிபாடு-தோற்றமும் வளர்ச்சியும் (க.இரகுபரன்), சோழர்காலத் திருமடங்கள் (சு.துஷ்யந்த்), சோழர் காலத்தில் சமஸ்கிருத நூல் களில் சைவ சித்தாந்தம் (கலைவாணி இராமநாதன்), திருவுந்தியார் திருக்களிற்றுப்பாடியார் நூல்களில் ஆணவம் (ந.முத்துமோகன்), சேக்கிழார் காட்டும் சைவசித்தாந்தம் (ஸ்ரீபிரசாந்தன்), கம்பராமாயணத்தில் இளையோடுகின்ற விசிட்டாத்வைதச் சிந்தனைகள் (ச.முகுந்தன்), இராமாநுசர் பணிகளும் தத்துவமும் (ஸ்ரீபிரசாந்தன்) ஆகிய கட்டுரைகளும், மொழியும் இலக்கியமும் என்ற மூன்றாவது பிரிவில் சோழர்காலத் தமிழ் வழக்கு (அம்மன்கிளி முருகதாஸ்), மொழியியல் நோக்கில் கம்பராமாயணம் (சுபதினி ரமேஷ்), சோழர்கால இலக்கண நூல்கள் ஒரு மீள்நோக்கு (மனோன்மணி சண்முகதாஸ்), சோழர்காலத் தமிழ் இலக்கண உருவாக்கம் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), தமிழர் அழகியல் சோழர்கால இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (ஏ.என். கிருஷ்ணவேணி), சோழர்காலச் சிற்றிலக்கியங்கள் -குலமுறை கிளத்தலும் அதன் பின்புலமும் (வ.மகேஸ்வரன்), குலோத்துங்க சோழன் குறித்த சிற்றிலக்கியங்கள் (வசந்தா வைத்தியநாதன்), சோழர் பெருமன்னர் கால சமஸ்கிருத இலக்கியம் (வி.சிவசாமி) ஆகிய கட்டுரைகளும் கோயில்களும் கலைகளும் என்ற இறுதிப் பிரிவில் சோழர்களின் மூன்று கோயில்கள் (சு.ராசவேலு), பாண்டிய நாட்டில் சோழர் கோயில்கள் (கு.சேதுராமன்), சோழர்கால இசை திருவிசைப்பா மாலை இசை (ஞானகுலேந்திரன்), சோழர்கால ஓவியக் கலை (சு.ராசவேலு), முற்காலச் சோழர் சிற்பக்கலை (வெ.வேதாசலம்), சோழர் காலத்து செப்புத் திருமேனிகள் (கு.சேதுராமன்), சோழர்கால அம்மன் விக்கிரகங்கள் (விக்னேஸ்வரி பவநேசன்) ஆகிய கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47020).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

Gratification Sans nul Annales 2023

Ravi Dangers En Bonus À l’exclusion de Archive Contrée Amenant Le plus Avec Publicités Ainsi que de Caractères Pourboire À l’exclusion de Conserve Vous n’avez

Dans Dice Roll Degeaba Spre Joc Pacanele

Content Simbolurile Slotului Online 100 Super Hot Cazinouri Noi Când Oferă Păcănele Online Asupra 100 Burning Hot Demo Simboluri Speciale Spre 100 Pandas Slot Machine