சொர்ணவதி மாசிலாமணி (பதிப்பாசிரியர்). இலங்கை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்லை, 18ஆவது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1980. (இலங்கை: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
x, 184 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
புதிய கல்விச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் எழுத்தாளர் குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்நூலில் 22 பாடத் தலைப்புக்களில் பதினொராம் தரத்திற்குரிய இந்து சமய பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் குழுவில் என்.சண்முகலிங்கம், வி. சிவராஜசிங்கம், க.சொக்கலிங்கம், கு.குருசுவாமி, செ.வேலாயுதபிள்ளை ஆகியோர் பணியாற்றினர். பதிப்பாசிரியராக ஐ.தம்பிமுத்து பணியாற்றினார். ஈழத்திற் சைவம் (எங்கள் சைவ பாரம்பரியம், சிவாலயங்கள், அம்மன் கோயில்கள், பிள்ளையார் கோயில்கள், முருகன் கோயில்கள், திருமால் கோயில்கள், வைரவர் வழிபாடு, எங்கள் ஞானியர்), அறுவகைச் சமயங்கள் (சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம்), சமய இலக்கியம் (பெரிய புராணத்தில் ஒரு காட்சி-தடுத்தாட்கொண்ட புராணம், கந்தபுராணத்தில் ஒரு காட்சி-திருப்பெரு வடிவம்), அன்புநெறி (சைவநாற்பாதங்கள், அடியார் கண்ட அன்புநெறி), அறிவுநெறி (மெய்கண்ட சந்தானம், சித்தாந்த சாத்திரங்கள், சைவமெய்யியல் தத்துவம், திருவருட்பயன்) ஆகிய ஐந்து பிரிவுகளில் வகுத்துத் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37450).