12077 – உலகில் மிகச் சிறந்த எட்டு சிவத்தலங்கள்.

அராலியூர் வி. செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: செல்வரத்தினம் கௌரி, அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, சித்திரை 2017. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு).

xxi, 219 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-38168-0-1.

சிவபெருமானின் எட்டுக் கோயில்கள் பற்றி எழுதப்பட்டுள்ள இந்நூலில் தல யாத்திரை பற்றிய தனது அனுபவ உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அழகிய முறையில் இலகுநடையில் எளிய தமிழில் ஆசிரியர் வடித்திருக்கிறார். சிவனுடைய கோவில்களின் கட்டிட அமைப்பும் கலை அம்சங்களும் மிகவும் சிறப்பான முறையில் இவரால் விளக்கப்பட்டுள்ளன. நிரைகொண்ட விநாயகர், திருக்கார்த்திகைத் தீப தரிசனம், கிரிவலம், மதுரையிலுள்ள திருத்தலங்கள், திருக்காளத்தி, காசி, விசேட அம்சங்கள், திருக்கயிலாயம், சிதம்பரம், திருவிடை மருதூர் சீர்காழி, திருவாரூர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் என வாசகர் விளங்கத்தக்க வகையில் கேள்வி பதில்களாக எழுதியிருப்பது வாசிப்பை எளிதாக்கு கின்றது. ஒவ்வொரு குறிப்பும் அது பற்றிய தெளிவான விளக்கங்களையும் பொருத்தமானமுறையில் ஆங்காங்கே தரப்பட்ட மேற்கோள்களையும் கொண் டுள்ளது. முன்னாள் உயர்வகுப்பு கணித, விஞ்ஞான ஆசிரியரான அராலியூர் வி. செல்வரத்தினம் தன் இளமைக் காலத்தில் கணித, விஞ்ஞான நூல்களையும் பின்னாளில் ஆன்மீக நூல்களையும் எழுதி வெளியிட்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62092).

ஏனைய பதிவுகள்

14821 ஜெப்னா பேக்கரி.

வாசு முருகவேல். சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, டிசம்பர், 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 128 பக்கம், விலை: இந்திய

12580 – குழந்தைகளுக்கான ஆரம்ப விஞ்ஞானம்: ஆண்டு 4.

ஞானசுரபி புத்தகசாலை. யாழ்ப்பாணம்: ஞானசுரபி புத்தகக் கம்பெனி, 217, மின்சார நிலைய வீதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386, மணிக்கூட்டு வீதி). (2), 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 15.50,