கனகசபாபதி நாகேஸ்வரன் (மூலம்), எஸ். வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). கொழும்பு: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக்குழு, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 110 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4745-03-2.
சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளரும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வழிவழி அறங்காவலர்களில் ஒருவருமான கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களால் எழுதப்பெற்று, ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளிலே வெளிவந்த கட்டுரைகளும், சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நயினாதீவு குறித்த ஆய்வுகளுக்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும், மணிபல்லவம் என்பது நயினாதீவே, நயினை நாகபூஷணி, அற்புதத் தெய்வம் நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாள், சீறிடும் நாகபூஷணித் தாய், குடமுழுக்குக் காணும் சக்திபீடம் நயினை நாகபூஷணி அம்மன், நயினை ஸ்ரீ நாகபூஷணியின் பத்ம பாதங்களில் ஆனந்த அருவியுடன் மலரிட்ட அந்தண திலகம், நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் தேர்த்திருவிழாச் சிறப்பிதழ், சர்வமத சந்நிதி நயினைப்பதியின் சிறப்பு, Let us pray to Nagapooshani Ambaal ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற பத்துக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இதுவாகும்.