வே.தர்மகுலசிங்கம் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்).
xvi, 88 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
வாழ்த்துரைகள், ஆசியுரைகள், மன்ற அறிக்கைகளையும் சமயம் சார்பான கட்டுரைகளையும் இம்மலர் உள்ளடக்குகின்றது. கனகசபாபதி தரிசனம் ஒருகால் கண்டாற் கலிதீரும் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), எமது நாட்டிற் சிவ வழிபாடு (சு.வித்தியானந்தன்), தாண்டவம் புரியும் எமதாண்டவன் (சாம் சண்முகநாதக் குருக்கள்), ஈழநாட்டில் முருக வழிபாடு (ஆ.வேலுப்பிள்ளை), அழகா முருகா தாலேலோ (ப.வேலுப்பிள்ளை), இலங்கையிற் சைவர்கள்: குடிசனப் புவியியல் நோக்கு (பொ.பாலசுந்தரம்பிள்ளை), இந்து மதத்தில் உருவ வழிபாடு (செ.மகேஸ்வரன்), குறிஞ்சிக் குமரன் (வே. இராமகிருஷ்ணன்), அறம் வளர்த்த தமிழ்த் தெய்வம் (ந.நிர்மலன்), ஈழத்துச் சிவாலயங்கள்: கி.பி.1000 முதல் 1300 வரை (சி.பத்மநாதன்), கந்தா நின் அருள் வேண்டும் (த.கலாமணி), மலையகத்து இந்துக்களின் தெய்வங்களும் வழிபாடுகளும் (சி.தில்லைநாதன்), மார்கழி நோன்பு (சிவகாமி கணபதிப்பிள்ளை), பல்கலைக்கழகத்தில் நடராஜர் பிரதிஷ்டை (ச.ஏ.பிரதாபர்), சிற்ப வித்தியாதரன் (இந்து மாணவர் சங்கம்), பேராதனைக் குறிஞ்சிக் குமரன் கோயிலும் பேராசிரியர் கனகசபாபதியும் (கலையரசி சின்னையா) ஆகிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02539. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008483).