சுபாஷிணி பத்மநாதன். தெகிவளை: விமலோதயகிளாசிக்கல் பரத நாட்டிய சென்டர், இல. 19, கிரகரி பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 4, நெல்சன் பிளேஸ்,
வெள்ளவத்தை).
(6), 82 பக்கம், தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 22 x 14.5 சமீ.
இந்நூல் ஏற்கனவே ஆசிரியரால் எழுதப்பட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட சில கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஆடற்கலையில் செறிந்தும், நிறைந்தும், பொதிந்தும், மலிந்தும் உள்ள பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்நூல் விளங்குகின்றது. குறிப்பாக தமிழக சாஸ்திரீக நாட்டிய வடிவங்களுக்கு இடையிலான தொடர்புஇ நடைமுறை நாட்டிய உருப்படிகளுக்கு இடையிலான ஓர் அடிப்படை நோக்குஇ காலக்கிரமத்தில் இக்கலை எதிர்கொள்ளும் சில உத்தியியல் மாற்றங்கள்இ பண்டைய பண்ணிசையும் நாட்டியமும் மற்றும் பண்டைய நாட்டிய நூல்களில் இடம்பெற்ற சில அரிய அம்சங்களும்இ அவற்றின் அன்றைய நிலைப்பாடுகளும், பரதக்கலை வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக அரும்பெரும் பங்களிப்பை நல்கிய, ஆண்களின் அர்ப்பணிப்பும், தொன்மை மிக்க தொல்காப்பியத்தில் இடம்பெறும் ரச உணர்வுப் பேதங்களும், அவற்றை இன்றைய ரச உணர்வுப் பேதங்களுடன் தொடர்புபடுத்திஇ ஆய்வு நோக்கில், இந் நூலில்
ஆராயப்படுகின்றது. அணுகுமுறையில்இ இந் நூலின் ஆய்வுக்கண்ணோட்டம், ஏனைய நாட்டிய நூல்களிலிருந்து வேறுபட்டு விளங்குவதாயும்இ மிகவும் எளிய தமிழில், லகு நடையில், யாவர்க்கும் விளங்கும் வகையில், இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நடனத்தைப் பயிலும் மாணவர்களுக்கும், மற்றும் இத்துறையில் ஈடுபாடும், ஆர்வம் மிக்க ரசிகப் பெருமக்களுக்கும், இக் கலையின் அடிப்படை நுட்ப நுணுக்கங்களை தெளிவுற உணரும் வகையில் இந்நூல் எழுதி வெளியிடப்படுகின்றது. இந்நூலில் உள்ள கட்டுரைகள், தமிழகம் தந்த இரண்டு கலாச்சார நாட்டிய வடிவங்கள், இன்றைய நடைமுறை நாட்டிய நிகழ்வுகளில் இடம்பெறும் நடன உருப்படிகள், இன்றைய பரத நாட்டியத்தில் பக்கவாத்தியப் பாவனைப் பிரயோகம், பரதத்தில் பதங்கள் கீர்த்தனங்கள் ஜாவளிகள், பரதத்தில் மாற்றமுறும் உத்திகள், வைணவமதப் பக்தி நெறியில் நாட்டியம், பண்டைய பண்ணிசையும் நாட்டியமும், பண்டைய நாட்டிய நூல்களும் இன்றையநாட்டியநூல்களும்,பரதக்கலையானதுஆண்களின்ஆர்வத்தாலும்,அர்ப்பணிப்பாலும்,அவணைப்பினாலேயுமே வளர்ச்சியுற்று, எழுச்சியுற்று, மிளிர்ச்சியுற்று உயர்ச்சிபெற்று வளம் பெற்றது, தெல்காப்பியத்தில் நாட்டியம் ஆகிய பத்து அத்தியாயங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20299. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007480).