ஆசிரியரை பற்றி

ஈழத்து தமிழ் தேசிய நூல் பட்டியல் படைப்பின் ஆசிரியர்.

ஆசிரியர் பற்றி முன்னோடிகளின் கருத்துக்கள்

தேடலையே வாழ்க்கையாக்கிக் கொண்ட நூலகவியலாளர்

இலக்கியத்துறையின் பல்வேறுபட்ட பிரிவுகளில் உள்ள எழுத்தாளர்களை அந்த அந்தப் பிரிவினரே அதிகமாக நன்கு அறிந்துவைத்திருப்பார்கள். ஆனால் நூலகவியலாளரும் ஊடகவியலாளருமான திரு.என்.செல்வராஜாவை அறிவியல்புலத்தின் அனைத்துப் பிரிவினரும் பரவலாக அறிந்து வைத்துள்ளார்கள் என்றால் அவர் மேற்கொண்டுள்ள பாரிய பணியும் அவருக்கேயுரிய தனித்துவமான நற்பண்புகளும்தான் காரணம். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை இதுவரை ‘நூல்தேட்டம்’ என்ற வரிசையில் ஒன்பது பெரிய தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தற்போது பத்தாவது தொகுப்பினை நிறைவுசெய்து அச்சிட ஆயத்தங்கள் செய்துவருவதுடன் பதினொராவது

மேலும் வாசிக்க »

சாதனை படைத்துவரும் நூலகவியலாளர் என்.செல்வராஜா

நூலகவியல் துறையில் நல்ல அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட திரு.என்.செல்வராஜா அவர்கள் அதன் மூலம் தமிழ்ச் சமுதாயத்திற்குக் கல்வி தொடர்பாக அளப்பரிய சேவைஆற்றி வருகின்றார். இவ்வாண்டு அகவை அறுபதை எய்தும் அவரது வாழ்க்கையின் சாதனையை எண்ணிப்பார்க்கும் போது ஒரு தனிமனிதர் எவ்வாறு இச்சாதனையைப் புரிந்தார் என்பது அதிசயம். நேர்மையான போக்கு, உறுதியான சிந்தனை, எடுத்ததைச் சாதிக்கவேண்டும் என்ற துணிவு, வேறு எவரிலும் தங்கியிராது தன்னம்பிக்கையுடன் செயற்படும் குணம், குடும்ப ஒத்துழைப்பு ஆகியவையே இவரது

மேலும் வாசிக்க »

திரவியம் தேடும் சமூகத்தின் விலை மதிக்க முடியாத திரவியம் என் செல்வராஜா!

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது யாழ் மக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி. இந்தத் திரவியத்தைத் தேடுவதே கல்வியின் இலக்கு என்கின்ற சிந்தனைப் போக்கு தமிழர்கள் மத்தியில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. திரவியத்தைத் தேடுவதற்கு உதவாத கல்வி சமூக அங்கிகாரத்தை பெறத் தவறுகின்றது. அறிவு பற்றிய இந்தக் குறுகிய பார்வை காரணமக தமிழ் சமூகத்தின் மத்தியில் துறைசார் நிபுணர்களின் உருவாக்கம் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது அல்லது

மேலும் வாசிக்க »

ஈழத்து தமிழ் தேசிய நூல் பட்டியல்