சி.என்.எச்.சாள்ஸ் (தொகுப்பாசிரியர்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வலைப் பதிப்பகம், 163, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், பருத்தித்துறை வீதி, நல்லூர்).
x, 185 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4444-0-1.
‘வலை’ என்ற பெயரில் பொது அறிவுத் தொகுப்பொன்று, மாதாந்த சமகாலச் செய்தித் தொகுப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தது. அதன் கடந்தகால ஒரு வருடத் தொகுப்பில் (ஒக்டோபர் 2012 முதல் செப்டெம்பர் 2013 வரையிலான பன்னிரண்டு இதழ்களிலிருந்தும்) சேர்க்கப்பட்ட தகவல்களைத் தாங்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச தினங்கள், இலங்கை பற்றிய சமகாலத் தகவல்கள், உலகத் தகவல்கள், அயலகத் தகவல்கள், விளையாட்டுத் தகவல்கள் என ஐந்து பிரிவுகளுக்குள் அடங்கும் வகையில் சமகாலத் தகவல்களை இந்தத் தொகுப்பு உள்ளடக்குகின்றது. பலாலியைப் பிறபபிடமாகக் கொண்ட சார்ள்ஸ் நூலகவியல்துறையில் பயின்று யாழ்ப்பாணப் பொது நூலகததில் பணியாற்றுகின்றார். சி.என்.ஹெய்ன்ஸ் என்ற புனைபெயரில் பத்திரிகைகளில் கவிதைகள், கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.