10003 தெரியுமா?அறிவியல் விளக்கங்களின் தொகுப்பு.

பொ.ஐங்கரநேசன். சென்னை 600010: அரும்பு பதிப்பகம், 49, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2007. (சென்னை 600010: SIGA  பதிப்பகம்).

xii, 240 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ.

தமிழகத்தில் தேவா ஜோ அவர்களைப் பதிப்பாசிரியராகக்கொண்டு வெளியிடப்பட்டு வரும் இளையோர் இதழான அரும்பு இதழில் தொடராக வெளிவந்த ‘தெரியுமா?’ என்ற அறிவியல் விளக்கப் பகுதி இங்கு தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அன்றாடம் எம்முள் எழும் கேள்வி-பதில் வடிவில் ஏராளமான தகவல்கள் இந்நூலில் பொதிந்துள்ளன. ஒருவருக்கு சாதாரணமாக ஏற்படும் சந்தேகங்களுக்கு விஞ்ஞான ஆய்வுரீதியில் விளக்கப்படங்களுடன் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விடைகள் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைத் தாயகமாகக் கொண்ட  பொ.ஐங்கரநேசன் தமிழின் குறிப்பிடத்தக்க அறிவியல் எழுத்தாளர்களுள் ஒருவர். அறிவியல் கட்டுரைகள் மாத்திரமன்றி சுற்றுச் சூழல், பண்பாடு, அரசியல் போன்ற துறைகளிலும் கட்டுரைகள் எழுதிவருகின்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியலில் முதுநிலைப் பட்டயப் படிப்பை மேற்கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41420).

ஏனைய பதிவுகள்

13885 நாவலர் நறுமலர்: சிறப்பு மலர்-ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு-2016.

க.இரகுபரன், ஸ்ரீபிரசாந்தன், மு.கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன்