ஆண்டு மலர் 2003. ப.ஜோதீஸ்வரன் (கௌரவ ஆசிரியர்), இ.சு.முரளீதரன் (பிரதம ஆசிரியர்). வல்வெட்டித்துறை: யா/உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(12), 78 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 20.5×14.5 சமீ.
ஒரு பாடசாலைச் சஞ்சிகை என்ற முத்திரையுடன் பார்க்கப்படாமல், கலை இலக்கியவாதிகளும், கல்வியியலாளர்களும், மாணவர்களுடன் கலை-இலக்கிய-சமூகத்தளமொன்றில் சந்திக்கும் வாய்ப்பினை ஏகலைவன் வழங்கியிருக்கிறது. இச்சஞ்சிகையின் ஆறாவது இதழ் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு மலராக வெளிவந்துள்ளது. தாட்சாயணியின் சிறுகதை, குப்பிழான் ஐ.சண்முகம், த.ஜெயசீலன், ச.முகந்தன், யாத்திரீகன், நரகத்துமுள் ஆகியோரின் கவிதைகளையும், பேராசிரியர்கள் க.அருணாசலம், சபா.ஜெயராஜா, கலாநிதி துரை மனோகரன், க.சொக்கலிங்கம், செங்கை ஆழியான், த.இராஜேஸ்வரன், சி.ஜெகநாதன் ஆகியோருடன் பல்வேறு பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33364).