10024 கோபுரம்: திறப்புவிழா சிறப்புமலர்.

சி.பாஸ்க்கரா (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.

கொழம்புத் தமிழ்ச்சங்கத்தின் பருவவெளியீடான கோபுரம் இதழின் சிறப்பு மலர். கொழும்புக்கு வரும் தமிழர்களின் தங்குமிடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஐந்து அறைகள் கொண்ட விருந்தினரகம், தமிழ்ச்சங்கக் கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் குறுகிய காலத்துக்குள் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அது தொடர்பான திறப்பவிழா 24.06.2011 அன்று நடைபெற்றவேளையில் வெளியிடப்பட்ட சிறப்பிதழ் இதுவாகும். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பணிகளை வாழ்த்திப் போற்றும் வாழ்த்துரைகளும், இலக்கிய வடிவங்களும் நிரப்பப்டாத இடைவெளிகளும் (சபா.ஜெயராசா), பாயிரப் படைப்பு வள்ளுவர் வழியில் கம்பன் (க.இரகுபரன்) ஆகிய கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50071).

ஏனைய பதிவுகள்