சந்திரிகா சுப்பிரமணியன். சென்னை 4: சுப்பிரமணியன், 1வது பதிப்பு. 1996. (சென்னை 600005: ராஜேஸ்வரி லித்தோ பிரஸ்).
iv, 37 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் பேசும் மக்களின் மேம்பாட்டில் அக்கறை காட்டிவருவதுடன் தமிழ்பேசும் மக்களின் குரலை உலகுக்கு உணர்த்திவரும் வீரகேசரி நிறுவனத்துக்கும் அதில் முப்பதாண்டுகளுக்கும் மேல் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்து இலங்கையின் தமிழ் இதழியல்துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியவருமான திரு. எம்.ஜி.வென்சுஸ்லோஸ் அவர்களுக்கும் சமர்ப்பணமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் அபிவிருத்தி இதழியல் பற்றிய புதிய கருத்தியலை தமிழில் பதிவுசெய்கின்றது. அபிவிருத்தி இதழியல் ஓர் அறிமுகம், அபிவிருத்தி இதழியல் சில அடிப்படைகள், அபிவிருத்தி இதழியலில் அடிப்படைத் தகவல்களும் புள்ளி விபரங்களும், அபிவிருத்தி இதழியலுக்கு சவாலாக அமையும் விஷயங்கள், இலங்கையில் அபிவிருத்தி இதழியல், அபிவிருத்தி இதழியலின் பன்முகத் தன்மை அபிவிருத்தி இதழியலும் நவீன தொழில்நுட்பமும் ஆகிய ஏழு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19268).