10045 ஒரு நிருபரின் களப் பதிவுகள்.

சின்னையா குருநாதன். திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 31/1 சமாது ஒழுங்கை, 1வது பதிப்பு, பங்குனி 2014. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், திருஞானசம்பந்தர் வீதி).

114 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0469-20-8.

திருக்கோணமலையின் மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன், தன் எழுபத்தாறாவது வயதில்  தனது 56 வருட ஊடகவியல் அனுபவங்களை இந்நூலில் 18 கட்டுரைகளின் வாயிலாகப் பதிவுசெய்திருக்கிறார். வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினக்குரல், உதயன், சஞ்சீவி ஆகிய இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளில் பணியாற்றிய செய்தியாளர் இவர். இலங்கையில் அவ்வப்போது நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வுகளின் செய்திகளை, அ.செ.முருகானந்தம் பேட்டிக் கட்டுரை, கன்னியா காட்டில் குள்ளமனிதர்கள், திருமலையைத் தாக்கிய சுனாமி, துடுப்பு, அவசர தேவை-உளவளத்துணை, பில் கிளின்டன் கிண்ணியாவில் அஞ்சலி, இலண்டனில் மேடையேறிய கடலின் குழந்தைகள்- புற்றரையில் ஒரு நாடகம், நடுக்கடலில், வாயார உண்டாய் வாழி நீ ஆழி, சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடியுடன் கண்ணீர் விட்ட தம்பலகாமம், கடற்கரை உப்புக்காற்றில் கரைந்துபோன எதிர்காலம், நீதிமன்றங்களில் தமிழ், மர்ம நாவல் போட்டியில் முதற் பரிசுபெற்ற திருக்கோணமலை அருள் சுப்பிரமணியம், பெண்ணைப் பெற்றவன் கவிஞன்அவளை மணப்பவன் சுவைஞன், இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவர்கள் சொன்ன உபகதைகள், சாதனைகளை முறியடிக்கத் துடிக்கும் வீரர்களின் தணியாத தாகம், பறவைகளே பறவைகளே ஏன் பாடுகின்றீர்கள், ஆகிய தலைப்புகளில் சுவையான கட்டுரைகளாக இந்நூலில் தந்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Content Как Играть В Авиатор Бесплатно Как Обойти Блокировку «пин Ап» Когда Вышел Слот Aviator? Как Играть В Игру Aviator На Деньги? Как Зарегистрироваться В