பொ.பூலோகநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 148 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-434-8.
நவீன மெய்யியலின் முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. மேலைத்தேய மெய்யியலின் வரலாற்று வளர்ச்சி என்ற முதலாவது அத்தியாயம் மெய்யியலின் வரலாற்று வளர்ச்சி பற்றியதோர் பொதுவான பார்வையாக அமைந்துள்ளது. நவீன மெய்யியலின் போக்குகள் என்ற இரண்டாம் அத்தியாயம் நவீன மெய்யியல் தொடர்பாகவும் அதன் இயல்புகள், போக்குகள் தொடர்பாகவும் ஆராய்கின்றது. நியாயவாதம் அல்லது அறிவுமுதல்வாதம் என்ற மூன்றாவது அத்தியாயம் நவீன மெய்யியலில் பிரதான இடம்பெறும் அறிவுமுதல்வாத கருத்துக்களை ஆராய்கின்றது. அனுபவமுதல் வாதம் அல்லது புலனுணர்ச்சிவாதம் என்ற நான்காம் அத்தியாயத்தில் நவீன மெய்யியலின் மற்றுமொரு பகுதியாகக் கொள்ளப்படும் அனுபவமுதல்வாதக் கருத்துகளும் அனுபவவாதத்தின் முன்னோடிகளான ஜோன் லொக், பார்க்ளி, டேவிட் கியூம் போன்றவர்களது வாழ்க்கை வரலாறுகளும் அவர்களது மெய்யியல் கருத்துக்களும் சிறப்பாக விளக்கப்படுகின்றது. நவீன மெய்யியலுக்கு இமானுவேல் காண்டின் பங்களிப்பு என்ற ஐந்தாவது அத்தியாயம் இமானுவேல் கான்டின் சிந்தனைகளை ஆராய்கின்றது.