சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
iv, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-53216-1-7.
சித்த மருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்தவப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். இலக்கியத்தில் போர் உள நெருக்கீடுகள் பற்றி மருத்துவ நோக்கில் இந்நூலில் ஆசிரியர் ஆராய்ந்துள்ளார். வட கிழக்கில், போருக்குப் பின்னரான தற்காலச் சூழல், பெருமளவில் சங்க மருவிய காலச் சூழலின் யதார்த்தத்தை எடுத்துக்கூறுவது போலவே காணப்படுவதாகக் குறிப்பிடும் ஆசிரியர், போர் நெருக்கீடுகளால் புரையோடிப் போயுள்ள உளப் புண்களை ஆற்றுவதற்கு அஞ்சனமாக இந்நூலை எழுதிச் சமூகத்துக்கு வழங்கியதாகக் குறிப்பிடுகின்றார்.