ரீ.ரீ.மயூரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சாந்திகம், இல.15, கச்சேரி நல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).
120 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.
பேராசிரியர் தயா சோமசுந்தரம், வைத்திய கலாநிதி சா.சிவயோகன் ஆகியோரை ஆலோசகர்களாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், உளநலம் சார்ந்த படைப்புகளின் தொகுப்பு. பிரச்சினைகளும் தீர்வுகளுக்கான அணுகுமுறைகளும் (எஸ்.இரவீந்திரன்), உடல்ரீதியான முறைப்பாடுகள், உளநோயின் வெளிப்பாடுகளாக இரக்கலாம் (தயா சோமசுந்தரம்), நான் வளர நீ, நீ வளர நான் (ஷிரோமி லேனாட்), வன்முறையின் தோற்றுவாயும் அதனைக் கையாளும் வழிமுறைகளும் (ரீ.விஜயசங்கர்), குடிபோதை-உடல், உளத் தாக்கங்கள் (இர.சந்திரசேகர சர்மா), இனப்பெருக்க சுகாதரம் (எஸ்.ரஞ்சனி), சமத்துவ சமுதாயத்திற்கு அடிப்படையான மனித உரிமைகள் (எஸ்.சிவாஜினி), உளநலத்தில் தமிழர் சமுதாய பாரம்பரிய வளங்களின் பயன்பாடு (க.நிஷாந்தன், எஸ்.மயூரன்), புலன்களுக்கு அப்பால் உள்வாங்குதல் (சிறுகதை, கோகிலா மகேந்திரன்), எமக்குள் சமூகம் சமூகத்துள் நாம் (த.ஸ்ரீஸ்கந்தராசா), உளநல ஆரோக்கியத்திற்கு உதவிசெய்யும் உளவளத்துணை (உதயனி நவரத்தினம்), உள ஆற்றுப்படை (கவிதை, ந.தவராஜ்), இன்றைய எமது இளைய சமுதாயம் உளவியல் நோக்கம் (தெ.விஜயசங்கர்), நீங்களும் (சிறுகதை, சி.கதிர்காமநாதன்), புகை வாழவின் பகை (கவிதை, ரீ.ரீ.மயூரன்), Suicide in Sri Lanka (N.Canagarathnam), Through the looking Glass (Katherine Melhot), யாழ்ப்பாணத்தில் சமூகசேவை நிறுவனங்கள்- ஒரு பட்டியல் (பத்மா) ஆகிய 18 ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 206022).