செ.தனபாலசிங்கம். யாழ்ப்பாணம்: செ.தனபாலசிங்கம், 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
xxix, 129 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18.5×12.5 சமீ.
இந்நூல் சைவத்தமிழறிஞர் செ.தனபாலசிங்கம் அவர்கள் எழுதிய பன்னிரு ஆன்மீகக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. வேல் உண்டு வினை இல்லை, முருகா எனும் நாமங்கள், மங்காத அழகன் மாறாத அழகன், பேசா அநுபூதி, வெற்றிவேற்பெருமான், அசதி ஆடுகிறார் அருணகிரியார், வினைதான் என் செய்யும், முருகனுக்கும் ஒரு கவலை, உயிரைக் காத்துக்கொள்ள ஒரு பாடல், இறைவன் கழல் ஏத்தும் இன்பம், புதுப்போர் பழம்போர், மனைவி ஏது கல்யாணம் ஏது ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114706).