க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1975. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி ஒழுங்கை).
viii, 345 பக்கம், விலை: ரூபா 10.50, அளவு: 21.5×14 சமீ.
தேசிய கல்வித் தராதரப் பத்திர 1975-77 ஆண்டுக்கான பாடத்திட்டத்தின் சைவசமயப் பகுதி முழுவதும் அடங்கிய நூல். சைவசமய வரலாறு, சைவசமயத்தின் தொன்மை, சிந்துவெளி நாகரீகத்துச் சிவ வணக்கம், சிவாகமங்களும் சிவ வணக்கமும், பன்னிரு திருமுறைகள், திருமுறைகள் அருளியோர் காலம், சமயகுரவர், திருமுறைகளைத் தொகுப்பித்தோர் காலம், திருமுறைகளின் பெருமை, சைவசித்தாந்த சாத்திரங்கள், சித்தாந்த நூல்களும் ஆசிரியர்களும், சித்தாந்த நூல்கள் கூறும் தத்துவம் (திருவுந்தியார், திருக்களிற்றுப்பாடியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்பநிராகரணம், சைவசந்தான குரவர், ஈழத்திற் சைவம், புராதன சைவாலயங்கள், சைவசித்தாந்த தத்துவம், முப்பொருள்- பதி, பசு, பாசம்- திருவருட்பயன், பதிமுதுநிலை, உயிரவைநிலை, இருண்மலநிலை, சைவசாதனையும் கிரியைகளும், சிவசின்னங்கள், திருவுருவ வழிபாடு, குருலிங்கசங்கம வழிபாடு, சைவநாற்பாதங்கள், சிவதீட்சை, விரதங்கள், விரதவகைகள், திருவருட் பாடல்கள் எனப்பல்வேறு விடயங்களையும் இந்நூல் மாணவர்களுக்கேற்ற வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் தருகின்றது. சைவப் புலவர் க.சி.குலரத்தினம் சைவாசாரிய கலாசாலையில் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களிடமும் புலோலியூர் சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரனாரிடமும் சைவசமய சாஸ்திரங்களைக் கற்றறிந்தவர். சென்னை சைவசித்தாந்த மகாசமாசத்தார் நடாத்திய சைவப்புலவர் தேர்வில் 1946இல் முதல் வகுப்பில் சித்தியெய்தியவர். 25 ஆண்டுகாலம் ஆசிரியப் பணிபுரிந்தவர். பாடநூல்சபையிலும் பரீட்சைப் பகுதியிலும், பாடநூல் வழிகாட்டித் துறையிலும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84831).