ஸ்ரீ முத்தைய செட்டியார். நாச்சியாபுரம்: ஸ்ரீ முத்தைய செட்டியார், 1வது பதிப்பு, 1911. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).
(4), 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
காவடிச்சிந்து இசைப் பாவடிவங்களில் ஒன்றான சிந்துப் பாவடிவத்தைச் சேர்ந்தது. இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்றான சிந்து, ஐந்து இசை உறுப்புக்களால் ஆனது. காவடி ஆட்டத்தின்போது பாடப்பெறும் காவடிச் சிந்து பல்லவியும் அனுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்றுவரும். இந்நூல் ஆலங்குடிச் சோலை விநாயகர் மேற் பாடப்பெற்ற காவடிச் சிந்தாகும். ஸ்ரீ முத்தைய செட்டியார், தமிழகத்தில் நாச்சியாபுரம் ஸ்ரீ கறுப்பன் செட்டியாரின் மகனாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0525).