வி.சிகண்டிதாசன். சித்தாண்டி: இளம் சைவ மாணவ மன்றம், 2வது பதிப்பு, ஒக்டோபர் 2005, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1987. (அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
சித்தாண்டி முருகனைத் துதி செய்யும் காவடிப் பாடல்களுடன் முருகனின் பேரில் இயற்றப்பட்ட அந்தாதியையும் இந்நூலில் இணைத்து வழங்கியுள்ளார். இவ்விரண்டாவது பதிப்பில் வெளிவரும் காவடிப் பாடல்களில் இலக்கண விதிமுறைகளுக்கு ஏற்றவாறு சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட சிகண்டிதாசன், திருக்கோணமலையை வாழ்விடமாகக் கொண்டவர். சோதிடத்தைத் தொழிலாகக் கொண்ட கவிஞர் இவர்.