மலர்க் குழு. கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், 91/5, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, ஐப்பசி 2004. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
viii, 67 பக்கம், விலை: விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ., ISBN: 955-1133-00-5.
ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை தினமும் பாடவேண்டிய பஞ்ச புராணங்கள் நூலின் ஆரம்பத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை, கந்த சஷ்டி கவசம், மாணிக்கவாசக சுவாமிகள் தில்லையில் அருளிய போற்றித் திருவகவல், ஸ்ரீ அபிராமிப்பட்டரின் அபிராமி அந்தாதி என்;பவற்றுடன் மாமன்றத்தின் வெளியீடுகள் பற்றிய சில விபரங்களும் இதில் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37069).